JobVibe.lk - Sri Lanka Job Portal

சிலாபத்தில் தடம் விலகிய புகையிரதம் கொழும்பு புத்தளம் புகையிரதப் பயணம் மாதம்பை வரை மட்டுப்படுத்தப்பட்டது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கொழும்பு புத்தளம் புகையிரதப் பாதையில் சிலாபம் புகையிர நிலையத்திற்கு அருகில் திங்கட்கிழமை (01) புகையிரதம் ஒன்று தடம் விலகியதன் காரணமாக புத்தளம் வழித்தடத்தில் இயக்கப்படும் புகையிரதப் பயணம் கொழும்பு கோட்டையிலிருந்து மாதம்பே வரை மட்டுமே இயக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.


திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து சிலாபம் நோக்கிப் புறப்பட்ட புகையிரதம் பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் சிலாபம் புகையிரத நிலையத்திற்குள் நுழையும்போது தடம் விலகியது.


இந்தச் சம்பவத்தின் காரணமாக கொழும்பு புத்தளம் புகையிர வழியாக பயணிக்கும் அனைத்து புகையிரதங்களும்  தற்காலிகமாக மாதம்பே புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال