JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் படகு ஓட்டப் போட்டி

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி சின்னக்குடியிருப்பு மற்றும் பெரியகுடியிருப்பு கிராம சேவையாளர் கூட்டுறவு மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு படகு ஓட்டப் போட்டிகள் சனிக்கிழமை (30) கற்பிட்டி சின்னக்குடியிருப்பு கடற்கரையில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது.


நாட்டின் பல பகுதிகளிலும் இருந்தும் மீனவர்கள் படகு ஓட்டப் போட்டிக்காக கற்பிட்டிக்கு வருகை தந்தனர்.


படகு போட்டியில் 10,15,25,40 குதிரை வலு கொண்ட இன்ஞின்களின் போட்டிகள் மற்றும் இன்ஞின்கள் பொருத்தப்பட்ட வல்லங்கள் என பல்வேறு போட்டிகள் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வின் அதிதிகளாக கற்பிட்டி பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال