JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி அக்ஷயன் உள்ளக கிரிக்கெட் போட்டித் தொடரில் செம்பியனானது 2013 சாதாரண தர மாணவர் அணி

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 2000 ம் ஆண்டிற்கு பின் சாதாரண தரப் பரீட்சை எழுதிய பழைய மாணவர்களை மையமாக கொண்டு அக்ஷயன் உள்ளக கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்று 2005 ம் ஆண்டு சாதாரண தர பரீட்சை எழுதிய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில்  கற்பிட்டி புட்செல் உள்ளக விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (30) இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை (31) அதிகாலை வரை மின்னொளியில் இடம்பெற்றது.


இச் சுற்றுப் போட்டியில் மொத்தமாக 27 அணிகள் கலந்து கொண்டதுடன் இறுதிப் போட்டிக்கு 2013 ம் ஆண்டு சாதாரண தர மாணவர் அணியும் 2005 ம் ஆண்டு சாதாரண தர மாணவர் அணியும் தகுதி பெற்றது.


விறு விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப் போட்டியில் எம்.டி எம் றாபித் தலைமையிலான 2013 ம் ஆண்டு சாதாரண தர மாணவர் அணி அக்ஷயன் உள்ளக கிரிக்கெட் தொடரின் செம்பியனாக மகுடம் சூடியதுடன் இரண்டாம் இடத்தை பிரஷன்னா தலைமையிலான 2005 ஆண்டு சாதாரண தர மாணவர் அணி பெற்றுக் கொண்டது.






Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال