JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரதேச இளம் உலமாக்களுக்கான இரு நாள் விசேட பயிற்சிப் பட்டறை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கற்பிட்டி பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் சமூகத்தின் ஆன்மீக மற்றும் தலைமைத்துவப் பண்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இளம் உலமாக்களுக்கான இரு நாள் பயிற்சி பட்டறையை கற்பிட்டி வன்னிமுந்தல்  டிரீம் ஹவுஸில் சனி மற்றும் ஞாயிறு (13,14) ஆகிய தினங்களில் நடாத்த உள்ளது.


ஆன்மீக ஆளுமைகளை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில், கற்பிட்டி பிராந்தியத்தில் தெரிவு செய்யப்பட்ட இளம் உலமாக்களுக்கான புதியதோர்  அத்தியாயத்தை உருவாக்குவதுடன் இளம் உலமாக்களை நிகழ்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய ஆளுமைமிக்க வழிகாட்டிகளாக மாற்றுவதற்காக இரு நாட்கள் கொண்ட விசேட பயிற்சிப் பட்டறையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வளவாளராக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இளைஞர்களுக்கான பயிற்றுவிப்பாளர் றம்ஸி கரதி கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال