JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் பிரஜா சக்தி வேலைத்திட்டம் தொடர்பான விஷேட கலந்துரையாடல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

பிரஜா சக்தி வேலைத் திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை. (12) கற்பிட்டி பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி தலைமையில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான எம் ஜே எம் பைசலின் பங்குபற்றுதலுடன் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள பிரஜா சக்தி குழுக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்திட்டங்கள் (Projects) மற்றும் அதற்கான மேலதிக அனுமதிகளைப் பெற்று அச்செயல்திட்டங்களை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான விடயங்களும் கவனம் செலுத்தப்பட்டது.

இதில் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம் ரிகாஸ் மற்றும் உப தவிசாளர் சமன் குமார ஹேரத் ஆகியோருடன் பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள் மற்றும் அதன் செயலாளர்களாகக் கடமையாற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் உட்பட  ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال