JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி கோட்ட மட்ட தமிழ் மொழித்தின போட்டியில் தில்லையூர் பாடசாலைக்கு இரு மூன்றாம் இடங்கள்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தமிழ் மொழித்தின விழா போட்டி நிகழ்வில் கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவிகளான எப் ஸஹ்ரா ஹிமா  வாசிப்பு பிரி இரண்டில் மூன்றாம் இடத்தையும் எம் எச் எப் ஹாஜரா பாவோதல் பிரிவு இரண்டில் மூன்றாம் இடத்தையும் பெற்று பாடசாலைகளுக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எஸ் எம் அரூஸ் தெரிவித்துள்ளார் 


அத்தோடு இம்மாணவிகளை தயார் படுத்தி ஊக்கமளித்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருக்கும் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பாடசாலை நிர்வாகம் சார்பாக தெரிவித்துள்ள அதிபர் தொடர்ந்து கற்பிட்டி கோட்ட மட்ட விளையாட்டு மற்றும் இணைபாட விதான செயற்பாடுகளிலும் கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர்கள் பல வெற்றிகளை பெற்று பாடசாலைகளுக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்து வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال