Breaking News

கற்பிட்டி ஏத்தாளையில் சட்டவிரோதமாக ஏறறி சென்ற மாட்டுடன் இருவர் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டியிலிருந்து நுரைச்சோலைக்கு அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மாடு ஒன்றை ஏற்றி சென்ற   இரு நபர்களையும் மாடு மற்றும் பட்டா வாகனத்தையும் கற்பிட்டி பொலிஸார் ஏத்தாளை எனும் இடத்தில் வைத்து மடக்கி பிடித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.


ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு குர்பான் கடமைக்காக மாடுகள் சட்ட விரோதமாக ஏற்றப்படுவதாக கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கற்பிட்டி பொலிஸ் நிலைய கடமைப் பொறுப்பதிகாரி கபில பிரேமதாச தலைமையில் விஷேட சுற்றிவளைப்பு குழுவினர் கடமையில் ஈடுபட்டுவரும் நிலையில் அவர்களின் அதிரடி நடவடிக்கை ஊடாகவே மேற்படி சட்டவிரோதமான மாடு ஏற்றும் செயல் தடுக்கப்பட்டுள்ளதுடன் குற்றவாளிகள் மற்றும் மாடு ஏற்றிய வாகனம் என்பன நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


அத்தோடு கற்பிட்டி பொலிஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இடம்பெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை முழுமையாக அகற்றும் நோக்கோடு கற்பிட்டி பொலிஸ் நிலைய கடமைப் பொறுப்பதிகாரி கபில பிரேமதாச தலைமையிலான குழுவினர் தொடர்ந்து செயல்பட்டுவருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








No comments