JobVibe.lk - Sri Lanka Job Portal

பூலாச்சேனையில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் மரதன் ஓட்டம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

ஹஜ் பெருநாளை முன்னிட்டு பூலாச்சேனை விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கற்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்டவர்களுக்கான திறந்த மரதன் ஒட்டப் போட்டி வெள்ளிக்கிழமை (29)  மிக சிறப்பாக இடம்பெற்றது.


இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸ் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கலந்து சிறப்பித்தார் 


திறந்த போட்டியாக இடம்பெற்ற மரதன் ஓட்டத்தில் முதலாம் இடத்தை கரம்பை உடலுக்காப்பள்ளத்தைச் சேர்ந்த அஸீம் அஹமட் பெற்றதுடன் இரண்டாம் இடத்தை பூலாச்சேனையைச் சேர்ந்த ஜவாட் ஜஹீட் பெற்றதுடன் மூன்றாம் இடத்தை பூலாச்சேனையைச் சேர்ந்த யாஸ்மின் யஸீட் பெற்றுக் கொண்டார்.






Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال