JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் ஆழ்கிணறு அமைக்கப்பட்டது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை மலே ஒன்றியம் மற்றும் இலங்கை முஸ்லிம் செரிட்டி செரன்டிப் அமைப்பு ஆகியவற்றின் ஒன்றிணைந்த முயற்சியுடாக புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தும் நோக்கில் ஆழ்கிணறு அமைக்கும் வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு மாணவர்களின் பாவனைக்கு வழங்கி வைக்கப்பட்டது


புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபர். எம்.முஹ்ஸி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இலங்கை முஸ்லிம் செரிட்டி செரன்டிப் அமைப்பின் பணிப்பாளர் முஜாஹீத் நிசார், பாடசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 


இவ்வாறான ஆழ்கிணறுகள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கான சுத்தமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படுவதன் மூலம் மாணவர்களின் சுகாதாரமான கல்வி சூழல் மற்றும் நாளாந்த தேவைப்பாடுகள் மேம்படும் என எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காடாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post

نموذج الاتصال