புத்தளத்திற்கு சிநேகபூர்வ விஜயம் மேற்கொண்ட கியூபா நாட்டின் தூதுவர்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளத்திற்கு சிநேகபூர்வமான விஜயமொன்றை மேற்கொண்ட கியூபா நாட்டின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதுவர் Patricia Lázara Pego Guerra வை புத்தளம் மாநகர சபையின் மேயர் ரின்ஷாட் அஹமட் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.
இவ் விஜயத்தின் போது புத்தளத்தின் பல்வேறு துறைகள் தொடர்பாக கியூபா நாட்டின் தூதுவர் மற்றும் புத்தளம் மாநகர சபையின் மேயர் ஆகிய இருவருக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றது. குறிப்பாக, கலாச்சார தொடர்பாடல்கள், விளையாட்டுத்துறை ஊடாக நட்புறவு மேம்பாடு மற்றும் வளப் பகிர்வு தொடர்பான முக்கிய கருத்துப் பரிமாற்றங்கள், மாணவர்களுக்கான் பல்கலைக்கழக புலமைப் பரில்கள் பெற்றுக் கொள்ளல் தொடர்பான திட்டங்கள் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், புத்தளம் திறந்த பல்கலைக்கழகம், பாத்திமா கல்லூரி மற்றும் அனல் மின்சார நிலையத்துக்கும் தூதுவர் விஜயங்களை மேற்கொண்டார்.
விசேடமாக, புத்தளத்தில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சமூகத்தினரையும் புத்தளம் சிரம்பையடி கிராமத்தில் சந்தித்து, அவர்களுடன் பல்வேறு முக்கிய கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டதுடன் ஆபிரிக்க தினத்தை (மே 25) நினைவுகூரும் வகையில் நடைபெற்ற அவர்களது கலாச்சார நிகழ்வுகளிலும் தூதுவர் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.










No comments