JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் - அருவைக்காடு வரையான புகையிரத பாதையில் மக்கள் பயணப் போக்குவரத்து புகையிரத சேவை ஆரம்பிக்க மக்கள் கோரிக்கை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளத்திலிருந்து அருவைக்காடு வரைக்கும் பொருளாதாரத்தை மட்டும் கருதி  புகையிரதப் பாதை அமைக்கப்பட்டு நீண்டகாலமாக சுண்ணக்கல் அகழ்விற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வரும் புகையிரதப் பாதையில் இப் பகுதியில் வாழும் பொது மக்களின் நலன்கருதி மக்கள் பயணப் போக்குவரத்து புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறும், அத்தோடு அதற்கு பொருத்தமான இடத்தில் புகையிரத நிலையமும் அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி வாழ் பொது மக்கள் புத்தளம் தூய தேசத்திற்கான கட்சியின் ஊடாக அரசிற்கும் போக்குவரத்து அமைச்சர் உட்பட சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கும் மக்களின் நலன்கருதி கூட்டாக கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.


புத்தளம் மாவட்டம் நாட்டின் பொருளாதாரத்தில் மின்சாரம், சீமேந்து, விவசாயம் மற்றும் மீன்பிடி என பல்வேறு வகையில் பங்களிப்பு செலுத்தி வருகின்றது. அதன் அடிப்படையில் புத்தளத்திலிருந்து அருவைக்காடு வரை பொருளாதார நோக்கை மட்டும் மையமாக கொண்டு அமைக்கப்பட்டு நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் புகையிரதப் பாதையில் இப்பகுதியில் உள்ள எழுவன்குளம், கரைத்தீவு, சேராக்குழி மற்றும் கங்கைவாடி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதான பொது மக்கள் பயண சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை புத்தளம் தூயதேசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்கார் ஊடாக பொது மக்கள் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال