JobVibe.lk - Sri Lanka Job Portal

தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடு .புத்தளம் ரத்மல்யாய கிராம உத்தியோகத்தர் பிரிவில் வரிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  ரத்மல்யாய கிராம உத்தியோகத்தர் பிரிவில் வதியும்  வரிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்றை கட்டுவதற்கு, அரசாங்க நிதியுதவியுடன் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் அண்மையில் (22) அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 


தெரிவு செய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு புதிய வீடுகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் வீடமைப்பு கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.


இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், புத்தளம் பிரதேச சபை உறுப்பினரும், பிரஜா சக்தி  தலைவருமான இஸ்ஸதீன் கியாஸ், தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள்,வீட்டு பயனாளிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வீட்டுதிட்ட உத்தியோகத்தரும் கலந்துகொண்டார்கள்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال