JobVibe.lk - Sri Lanka Job Portal

பிரதி பொலிஸ் மாஅதிபர் புத்தளம் பெரியபள்ளி விஜயம்.

எம்.யூ.எம்.சனூன்

வடமேற்கு புத்தளம் மாவட்டத்துக்கான பிரதி பொலிஸ் மாஅதிபர் (DIG) பிரியந்த சந்திரசிரி 20 ம் திகதி புதன்கிழமை மாலை புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரியரபள்ளிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.


புத்தளம் மாநகரம் ஒரு வர்த்தக மையம் என்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விபரமாக கலந்துரையாடியதோடு, போதை வஸ்து விற்பனை, பாவனை உட்பட சமூக விரோத, சட்ட விரோத குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்தார்.


இச்சந்திப்புக்கு புத்தளம் பெரியபள்ளி நிர்வாக சபையின் தலைவர் ஏ.டி.எம். நிஜாம், செயலாளர் ஏ.ஏ. அஸீம் மற்றும் நிர்வாகிகளும், புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கம் (PUTWA) தலைவர் எஸ்.எச்.எம். ஜப்ரிஸ், மதுரங்குளி வர்த்தக சங்கத் தலைவர் அமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.


கலந்துரையாடலின் பின்னர் பெரியபள்ளியின் உட்புற கட்டுமானங்களையும் கோபுர கடிகாரத்தையும் பார்வையிட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த மகிழ்ச்சியையும் பூரிப்பையும் தெரிவித்தார்.









Previous Post Next Post

نموذج الاتصال