JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி மண்டலக்குடா மீன்பிடி சங்கத்திற்கான தளபாடங்கள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

பவித்ரா நில்ககுலு நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் கற்பிட்டி மண்டலக்குடா அல் பலா மீன்பிடி சங்கத்தின் செயலாளர் ஜே. வசந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க மண்டலக்குடா கடற்கரையை அண்டிய பகுதியில் உள்ள  பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் மூன்று இலட்சம் பெறுமதியான மீன்பிடி சங்கத்திற்கான கதிரைகள்,  ஹட் என்பன வழங்கும் நிகழ்வு புதன்கிழமை மண்டலக்குடாவில் மீன்பிடி சங்கத்தின் தலைவர் வீ.முத்துக்குமார் தலைமையில் இடம்பெற்றது 


இந்நிகழ்வில் இராஜகிரிய பெலஜீகொஸ் தனியார் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஸ்டிவ் கிரீச், அதன் கற்பிட்டி பிராந்திய இணைப்பாளர், கற்பிட்டி கடற்றொழி பரிசோதகர் சமன் குமார ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதன்போது கற்பிட்டி மண்டலக்குடா கடற்கரைப் பகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 55 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மீன்பிடி சங்கத்திற்கு 60  பிளாஸ்டிக் கதிரைகள் மற்றும் ஹட்  என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன் இதன் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال