Breaking News

நுரைச்சோலை அமானிய்யதுல் இப்ராஹிமிய்யா அரபுக் கல்லூரியின் 14 வது அல்-ஆலிம் பட்டமளிப்பு விழா நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம், நுரைச்சோலை அமானிய்யதுல் இப்ராஹிமிய்யா அரபுக் கல்லூரியின் 14 வது அல்-ஆலிம் பட்டமளிப்பு விழா நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (24) கல்லூரியின் பணிப்பாளர் மற்றும் அதிபர்          தலைமையில் கல்லூரி வளாகத்தில்  இடம்பெற்றது.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான  எம்.ஜே.எம். பைசல் கலந்து  சிறப்பித்தார்.


கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.நூருல் அமீன், கல்லூரியின் அதிபர் மௌலவி  அல்ஹாஜ் எம்.ஐ.முபாரக் அலி,  சிறப்பு பேச்சாளராக புத்தளம் அப்துல் மஜீத் கல்வியகத்தின் ஸ்தாபகரும்,  முன்னாள் ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளருமான அஷ்ஷெய்க் எச்.அப்துல் நாசர் ரஹ்மானி, விருதோடை ஜும்ஆ  பள்ளி பிரதான இமாம் அல்ஹாபிழ், மௌலவி நஸ்மின் உள்ளிட்ட பிற மத்ரசாக்களின் அதிபர்களும், ஆசிரியர்களும், மௌலவிமார்களும், மாணவர்களும், பெற்றோர்களும் நலன் விரும்பிகளும் இதில் கலந்து கொண்டனர்.











No comments