Breaking News

மாதம்பை அல் மிஸ்பாஹ்வில் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வானது மாதம்பை அல் மிஸ்பாஹ் பாடசாலையில்  அதிபர் எஸ்.எல். அன்வர் தலைமையில் வியாழக்கிழமை (23) காலை நடைபெற்றது.


இந்நிகழ்வில் அதிபர் எஸ்.எல்.அன்வர் தலைமையுரை நிகழ்த்தியதோடு க.பொ.த உயர் தர ஆசிரியர்களான எம்.யூ.எம். அஸ்ரம் மற்றும் ஏ.கே. உபைதுல்லாஹ் ஆகியோரின் பங்கேற்பின் கீழ் உரிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டன.


இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் எழுதிய மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர், மெஸ்டா அமைப்பினர் மற்றும் உயர் தர செயற்றிட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய இக்ரா அமைப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.


இம்முறை மாதம்பை அல்மிஸ்பாஹ்வின் உயர்தர பெறுபேறானது அவ்வூரின் வரலாற்று சாதனையாக பதிவாகியுள்ளதாக அதிபர் எஸ்.எல்.அன்வர் தெரிவித்தார்.








No comments