JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் கைகலப்பு ஏழு பேருக்கு காயம் ஆனமடுவயில் சம்பவம்

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

ஆனமடுவ, கரம்பேவ பிரதேசத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு விழாவின் போது ஏற்பட்ட மோதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். 


காயமடைந்தவர்கள் ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த புத்தாண்டு விழாவிற்கு வருகை தந்திருந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பழைய பகைமை காரணமாக இந்த அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 


இதனைத் தொடர்ந்து, அது கைகலப்பாக மாறியுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


இந்த மோதலில் புத்தாண்டு விழாவில் கலந்துகொண்ட சுமார் 20 பேர் வரை ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


காயமடைந்தவர்களுக்கு பலத்த காயங்கள் இல்லை எனவும், சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனமடுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال