கொழும்பில் இடம்பெற்ற தெற்காசிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ILO), உலக வங்கி மற்றும் ILO-வின் சர்வதேச பயிற்சி மையம் (ITCILO) ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், தெற்காசிய நாடுகளின் பங்கேற்புடன் கொழும்பில் நான்கு நாட்களாக நடைபெற்ற "The South-4-Care Learning Hub: Advancing Decent Work in the Care Economy in South Asia" மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை...
பராமரிப்புச் சேவைகள் மீதான கவனம் குறைவதென்பது தற்செயலான ஒரு சம்பவம் அல்ல. அது உலகவாழ் பெண்ணியப் பொருளாதார நிபுணர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் பெண்ணியம் சார்ந்த ஒரு முக்கிய பிரச்சினையாகும். பெண்கள் ஊதியமின்றி மேற்கொண்டுவரும் இத்தகைய பராமரிப்புச் சேவைகள், ஒரு கட்டமைப்பு ரீதியான அதேவேளை பெண்ணியப் பிரச்சினையாகும் என்பதால், இதற்குரிய தீர்வுகள் காணப்பட வேண்டும். ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் பெண்களின் இந்த ஊதியமற்ற உழைப்பின் மீதே தங்கியிருக்கின்றது.





No comments