JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் பெரிய பள்ளிவாசலின் கீழ் செயல்பட்டு வரும் கடைகளின் உரிமையாளர்களுக்கும், பெரிய பள்ளிக்குமிடையிலான வாடகை தொடர்பாக சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது.

எம்.யூ.எம்.சனூன், எம். எச். எம். சியாஜ்

புத்தளம் பெரிய பள்ளிவாசலின் கீழ் செயல்பட்டு வரும் கடைகள் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், வாடகைத் தொகை அதிகரிப்பு தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் கடை வாடகை உரிமையாளர்களுக்கும் இடையே சில காலமாக கருத்து முரண்பாடுகள் நிலவி வந்தன.


இவ்விவகாரம் நீண்ட காலமாக தீர்வு எட்டப்படாமல் இருந்த நிலையில், அதனை சுமுகமாக தீர்த்து வைக்கும் பொருட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை நடு நிலையான முறையில் தலையீடு செய்து இரு தரப்பினருடனும் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. 


அதன் விளைவாக இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. 


இதனைத் தொடர்ந்து புதிய ஒப்பந்தம் மிக விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.


மேலும், இவ்விடயத்தில் சட்டபூர்வமான மற்றும் நிர்வாக ரீதியான அனுமதிகளைப் பெறுவதற்காக, ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் அதன் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து தேவையான அனுமதிகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இவ்விவகாரம் சுமுகமாக தீர்வு காண உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், குறிப்பாக ஜம்இய்யா உறுப்பினர்கள், பெரிய பள்ளி நிர்வாகம் மற்றும் கடை வாடகையாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது என ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பி.ஜிப்னாஸ் அல் மிஸ்பாஹி தெரிவித்தார்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال