(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் 'இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி'யின் 'வாரிஸாதுல் இஸ்லாஹிய்யா' (பழைய மாணவியர் ஒன்றியம்) தனது முதலாவது 'பார்வை'.என்ற சஞ்சிகையை வெளியீட்டுள்ளது.
இவ்வமைப்பு உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டு ஒரு வருடகாலத்துக்குள் முதல் பிரசவம் இடம்பெற்றுள்ளது. "அறிவியலின் பல்வேறு பரிணாமங்கள் வெவ்வேறு கோணங்களில் ஆழமாக ஆராயப்பட்டு சமூகத்துக்கு எடுத்துச்செல்லப்படல் வேண்டும்" என்ற, 'பார்வை' ஆசிரியரின் பார்வை நிறைவேறிவருவதனை 'பார்வை' பறைசாற்றுகிறது.
1989 இல் உருவாக்கப்பட்ட புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் வரலாற்றில், அதன் அதிபர் மர்ஹூம் உஸ்தாத் எம் எச் எம் எம் முனீரின் இழப்பு ஈடு.செய்யமுடியாத ஒரு பேரிழப்பு என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
பார்வை சஞ்சிகை பற்றிய நூல் ஆய்வை புத்தளம் வலய கல்வி பணிமனையின் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் இஷட்..ஏ. சன்ஹீர் (ஓய்வு நிலை) மேற்கொண்டுள்ளார்.
பார்வை சஞ்சிகை பிரதிகளை பெற்றுக் கொள்ளவும் உங்கள் பிரதேசங்களிலும் சஞ்சிகையினை அறிமுகப்படுத்தி பிறருக்கும் பயனுள்ளதாக அமைத்துக் கொடுக்கவும் பின்வரும் சகோதரியை தொடர்பு கொள்ளுங்கள்.
சகோதரி காமிலா நுஹ்மான்
077 327 5060






