JobVibe.lk - Sri Lanka Job Portal

கரம்பையில் 10 நட்சத்திர ஆமைகளுடன் இருவர் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம், கரம்பை பகுதியில் சட்டவிரோதமாக அரிய வகை நட்சத்திர ஆமைகள் 10 ஐ தம்வசம் வைத்திருந்த இருவர் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்


புத்தளம் ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து புத்தளம் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த அதிரடி நடவடிக்கை இடம்பெற்றது.


கைது செய்யப்பட்ட இருவரும் 26 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال