JobVibe.lk - Sri Lanka Job Portal

மூன்று மாதங்களில் 10 பலநாள் மீன்பிடி படகுகளில் 1800 கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றிய கடற்படை பெறுமதி 44 பில்லியன்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இந்த ஆண்டின் கடந்த 3 மாத காலப்பகுதிக்குள் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற 10 உள்நாட்டு பல நாள் மீன்பிடி படகுகள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. 


போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி படகொன்று வெள்ளிக்கிழமை (17) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், கடற்படை ஊடகப் பேச்சாளர் புத்திக சம்பத் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். 


கடந்த மூன்று மாத காலழ் பகுதியில் படகுகளில் இருந்து ஐஸ், ஹெரோயின், ஹசீஸ் மற்றும் கொக்கைன் போன்ற பிரதான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 


அவ்வாறு அந்தப் பல நாள் மீன்பிடி படகுகளில் இருந்து 1,800 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகவும் அவ்வாறு கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி சுமார் 44 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال