Breaking News

கராத்தே மாபியா ? சில உண்மைகள்.

இலங்கையின் மூத்த கராத்தே போதனாசிரியர்ககளின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தில், 


1975 இல் ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து 2015 வரையான 40 வருட காலங்களில் 220 சங்கங்கள் மாத்திரம் தேசிய சம்மேளனத்தில் (SLKF) பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் மிகவும் தகுதியான ஆசிரியர்கள்.   


1975 தொடக்கம் 2025 வரைக்கும் தேசிய சம்மேளனத்தின் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 600 க்கு மேல் ஆகும்.


ஆனால் 2015 தொடக்கம் 2025 வரையான பத்து வருட குறுகிய காலங்களில் மாத்திரம் நானூறு (400) சங்கங்கள் தேசிய (SLKF) சம்மேளனத்தில் இணைக்கப்பட்டது. 


இந்த நானூறு (400) சங்கங்களும் யார் ? இவர்களில் எத்தனை பேருக்கு கராத்தே தெரியும் ? எத்தனை பேருக்கு கராத்தே பயிற்சி வகுப்புக்கள் உள்ளது ? தேசிய சம்மேளனத்துக்குரிய தகுதிகள் இவர்கள் அனைவரிடமும் உள்ளதா ? ஏன் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இணைக்கப்பட்டனர் ? போன்ற கேள்விகள் உள்ளன.  


ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தை நிருவகிப்பதற்கு ஏனையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல், தாங்கள் மாத்திரமே வாழ்நாள் முழுவதும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற பேராசையில், செல்வாக்கை அதிகரிப்பதற்காக ஒரு குழு இயங்கியதுதான் இதற்கு காரணமாகும். 


மிகவும் கவலைப்பட்ட நிலையில், மூத்த ஆசிரியர்களில் சிலர் என்னிடம் கூறியவைகள்,   

👇👇👇


“”நான் எனது மாணவனை தனியாக கொழும்புக்கு அனுப்புவதில்லை. அவ்வாறு அனுப்பினால், புதிய சங்கம் ஒன்றினை எனது மாணவனின் பெயரில் பதிந்துவிடுவார்கள்”” 


“”தேசிய கராத்தே போட்டியில் விளையாடிய எனது மாணவனுடன் ஒன்றாக இருந்தோம். மறுநாள், எனக்கு தேசிய சம்மேளனத்தில் அங்கத்துவம் கிடைத்துவிட்டதென்று அம்மாணவன் தொலைபேசி மூலமாக கூறினான். அதிர்ந்துபோனேன்.”” 


“”எனது சங்கத்தின் விழாவுக்கு தேசிய சம்மேளன நிருவாகியை அதீதியாக அழைத்தேன். அங்கு எனது மாணவர்களுடன் ஏற்பட்ட தொடர்புக்கு பின்பு எனது மூன்று மாணவர்களுக்கு தலா மூன்று சங்கங்கள் வழங்கப்பட்டதாக அறிந்தேன்.””  


“”நான் Black Belt 5th DAN தரத்தில் உள்ளேன். ஆனால் எனது மாணவனுக்கு Black Belt 6th DAN வழங்கப்பட்டு, தேசிய சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.””  


“”நான் Black Belt 1st DAN தரத்தில் இருந்தேன். ஆனால் எனக்கு நேரடியாக Black Belt 4th DAN சான்றிதழை தந்து என்னை தேசிய சம்மேளனத்தில் இணைத்தார்கள்”” என்று ஒரு நண்பர் கூறினார்.   


கடந்தகால ஆட்சியாளர்களின் சுயநலனுக்காக, கராத்தேயின் கௌரவம், அதன் புனிதம் அனைத்தும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளது. 


மூத்த ஆசிரியர்கள் மற்றும் உயர்ந்த நிலைக்கு வளர்ந்த கராத்தே சங்கங்கள் அனைத்தும் பல கூறுகளாக உடைக்கப்பட்டது.


மாபியாக்களின் செயற்பாடுகளை அறிந்துள்ள ஒரு சில மூத்த ஆசிரியர்கள் வாய் மூடி மௌனியாக இருப்பது கவலையான விடயம்.  


கராத்தே மாபியாவால் பாதிக்கப்பட்ட இன்னும் பல மூத்த ஆசிரியர்கள் குடும்ப வேலைகள் காரணமாக இந்த கொண்டாட்டத்திற்கு வரவில்லை.  


முகம்மத் இக்பால் 

சிரேஸ்ட கராத்தே போதனாசிரியர். 

   

කරාටේ මාෆියාව? සමහර සත්‍යයන්.


ශ්‍රී ලංකාවේ ජ්‍යෙෂ්ඨ කරාටේ උපදේශකවරුන්ගේ සිංහල අලුත් අවුරුදු උත්සවයේදී,


1975 දී ශ්‍රී ලංකා කරාටේ දෝ සම්මේලනය ස්ථාපිත වූදා සිට 2015 දක්වා වූ වසර 40 ක කාලය තුළ සංගම් 220ක් පමණක් ජාතික සම්මේලනයේ (SLKF) ලියාපදිංචි වී තිබුණි. ඔවුන් සියල්ලම ඉතා සුදුසුකම් සහිත උපදේශකවරුන් වේ.


1975 සිට 2025 දක්වා ජාතික සම්මේලනයේ මුළු සාමාජික සංඛ්‍යාව 600ට වැඩි වී ඇත.


නමුත් 2015 සිට 2025 දක්වා වූ කෙටි වසර 10 ක කාලය තුළ පමණක් සංගම් 400ක් ජාතික (SLKF) සම්මේලනයට එක් කරගෙන ඇත.


මෙම සංගම් 400 කවුද? ඔවුන්ගෙන් කොපමණ දෙනෙකුට කරාටේ දැනුම තිබේද? කොපමණ දෙනෙකුට කරාටේ පුහුණු පන්ති ඇතද? ජාතික සම්මේලනයට අදාළ සුදුසුකම් ඔවුන් සියල්ලට තිබේද? ඇයි මෙතරම් වැඩි සංඛ්‍යාවක් එක් කරගෙන ඇතද? යන ප්‍රශ්න මතුවේ.


ශ්‍රී ලංකා කරාටේ දෝ සම්මේලනය පාලනය කිරීම සඳහා අනෙකුත් අයට අවස්ථාව ලබා නොදී, තමන් පමණක් ජීවිත කාලය පුරාම පාලනය කරගෙන යාමට ඇති ආශාවෙන්, බලය වැඩි කර ගැනීම සඳහා කණ්ඩායමක් ක්‍රියා කළේය.


ඉතා දුක්බර තත්වයකින්, ජ්‍යෙෂ්ඨ උපදේශකවරුන් කිහිප දෙනෙක් මට පැවසූ දේවල්,

👇👇👇


“මම මගේ ශිෂ්‍යයා තනිව කොළඹට යවන්නේ නැහැ. එසේ යවූ විට, මගේ ශිෂ්‍යයාගේ නමින් නව සංගමයක් ලියාපදිංචි කරනු ඇත.”


“ජාතික කරාටේ තරඟයේ ක්‍රීඩා කළ මගේ ශිෂ්‍යයා සමඟ එකට සිටියා. ඊළඟ දවසේ, මට ජාතික සම්මේලනයේ සාමාජිකත්වය ලැබී ඇති බව එම ශිෂ්‍යයා දුරකථනයෙන් පැවසුවා. මම අතිශයින් පුදුමයට පත් වුණා.”


“මගේ සංගමයේ උත්සවයට ජාතික සම්මේලනයේ පරිපාලකයෙකු විශේෂයෙන් ආරාධනා කළා. එහිදී මගේ ශිෂ්‍යයන් සමඟ ඇති වූ සම්බන්ධතාවයෙන් පසුව, මගේ ශිෂ්‍යයන් තිදෙනාට තනි තනිව සංගම් තුනක් ලබා දී ඇති බව දැනගත්තේය.”


“මම Black Belt 5th DAN මට්ටමේ සිටිමි. නමුත් මගේ ශිෂ්‍යයාට Black Belt 6th DAN ලබා දී, ජාතික සම්මේලනයට එක් කර ඇත.”


“මම Black Belt 1st DAN මට්ටමේ සිටියා. නමුත් මට සෘජුවම Black Belt 4th DAN සහතිකය ලබා දී, ජාතික සම්මේලනයට එක් කළා” යැයි මිතුරෙකු පැවසීය.


පසුගිය කාලයේ පාලකයන්ගේ පුද්ගලික ප්‍රයෝජන සඳහා, කරාටේගේ ගෞරවය සහ එහි පවිත‍්‍රත්වය සම්පූර්ණයෙන්ම විනාශ කර ඇත.


ජ්‍යෙෂ්ඨ උපදේශකවරුන් සහ උසස් මට්ටමට වර්ධනය වූ කරාටේ සංගම් සියල්ල බොහෝ කොටස්වලට බෙදී ගොස් ඇත.


මාෆියා ක්‍රියාකාරකම් පිළිබඳ දැනුවත් ජ්‍යෙෂ්ඨ උපදේශකවරුන් කිහිප දෙනෙක් නිහඬව සිටීම කණගාටුදායක කරුණකි.


කරාටේ මාෆියාවෙන් බලපෑමට ලක් වූ තවත් බොහෝ ජ්‍යෙෂ්ඨ උපදේශකවරුන් පවුල් කාර්යයන් හේතුවෙන් මෙම උත්සවයට පැමිණ නැත.


මුහම්මද් ඉක්බාල්

ජ්‍යෙෂ්ඨ කරාටේ උපදේශක.




No comments