Breaking News

குறிஞ்சிப்பிட்டி பாலர் பாடசாலையில் இடம்பெற்ற புதிய மாணவர் உள்வாங்கும் நிகழ்வு

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் சாந்த மரியா பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு புதன்கிழமை (14) பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக குறிஞ்சிப்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம் அஸ்கர் கலந்து கொண்டு பிள்ளைகள் அமானிதம் என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலும் சிறார்களின் எதிர்காலம் குறித்தும் இன்று சமூகம் எதிர்நோக்குகின்ற பாரிய சவால் மற்றும் முகம் கொடுக்கும் போதை பிரச்சினை தொடர்பாகவும் தெளிவூட்டப்பட்டது 


இந்நிகழ்வில் அதிதிகளாக சார்ந்த மரியா மீன்பிடி சங்கத்தின் தலைவர் பீ.கே.பீ கென்சி நோனிஸ் ஆசிரியர் மிதந்து நோனீஸ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










No comments