கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம். என். எம் றினோஸின் முன்மாதிரியான செயற்பாடு
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
புத்தளம் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற சிரமதானத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட குப்பைகளை அகற்றும் முகமாக பெகோ இயந்திரம் வழங்கி உதவிய கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம். என். எம். றினோஸ்.
பாடசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளை உடன் கவனத்தில் கொண்டு கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம். என். எம். றினோஸ் இன்று (18) வியாழக்கிழமை பிற்பகல் பாடசாலையில் சிரமதானத்தின் மூலம் குவிக்கப்பட்ட சகல குப்பைகளையும் அகற்றி பாடசாலை சூழலை சுத்தப்படுத்தி நுளம்பு பெருக்கம் மற்றும் டெங்கு பரவலில் இருந்து மாணவர்களை பாதுகாத்துள்ளதை பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகம் சார்பாக பாராட்டுவதுடன் நன்றிகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








No comments