Breaking News

புத்தளம் ஐ.எப்.எம். முன்பள்ளியின் 53 வது ஆண்டு நிறைவும் மற்றும் அதன் வருடாந்த கலை விழாவும்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரில் தமிழ் மொழி மூலம் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட புத்தளம் மூன்றாம் குறுக்குத் தெருவில் இயங்கும் ஐ.எப்.எம். முன்பள்ளியின் 53 வது ஆண்டு நிறைவு மற்றும் அதன் வருடாந்த கலை விழா என்பன இம்மாதம் 30 ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 04.30 க்கு புத்தளம் மஸ்ஜித் வீதி நுஃமான் வரவேற்பு மண்டபத்தில் அதன் பொறுப்பாசிரியை திருமதி எம்.எஸ்.பௌசுல் ரூஸி தலைமையில் மிக விமரிசையாக இடம்பெறவுள்ளது.


புத்தளம் நகரில் தமிழ் மொழி மூல முன்பள்ளிகள் எதுவுமே இல்லாத ஒரு கால கட்டத்தில் 04.02.1972 ம் ஆண்டு இந்த ஐ.எப்.எம். முன்பள்ளி புத்தளத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இந்த கலை விழா நிகழ்வில் முன்பள்ளி சிறார்கள் இரு குழுவினராக பிரிக்கப்பட்டு 28 மாணவர்களும் தமது திறமைகளை மேடையில் வெளிக்கொணரவுள்ளனர்.


"நாம் இல்லையேல் நாளை என்பதும் இல்லை" என்பது இந்த வருட கலை விழாவின் தொனிப்பொருளாகும். 


நிகழ்வில் பங்கேற்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் பெறுமதியான பரிசுகளோடு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.


இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தளம் மாநகர சபையின் மேயர், பிரதி மேயர் உள்ளிட்ட உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், இந்த முன்பள்ளியின் பழைய மாணவர்களான அரசியல் பிரபலங்கள், கல்வியியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி, முன் பிள்ளை பருவ அபிவிருத்தி அதிகாரி உள்ளிட்ட மாநகர சபையின் அதிகாரிகள், சமய தலைவர்கள், புத்தி ஜீவிகள், ஏனைய முன்பள்ளிகளின் ஆசிரியைகள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.


இந்த ஐ.எப்.எம். முன்பள்ளியானது புத்தளம் நகரில் பல உயர் பதவிகளை வகிக்கின்ற பலரை உருவாக்கிய பெருமையோடு இன்றும் சேவையாற்றி கொண்டிருப்பதானது இதன் வரலாற்று சாதனையை பறை சாட்டுகிறது.


சிறுவர்களின் இந்த கலை விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பித்து மழலை செல்வங்களுடைய விளையாட்டு திறமைகளுக்கு உற்சாகமளிக்குமாறு முன்பள்ளி பொறுப்பாசிரியை எம்.எஸ். பௌசுல் ரூஸி சனூன் வேண்டுகோள் விடுப்பதோடு, நிகழ்வை சிறப்பாக நடாத்தி முடிக்க அனுசரணை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.


2026 ஜனவரியில் இந்த முன்பள்ளியானது தனது 54  வது வயதில் கால் பதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.








No comments