வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவித்தொகை.
எம்.யூ.எம்.சனூன்
கடந்த நாட்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் புத்தளம் தில்லையடி பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை பதிவு செய்யும் செயற்பாடுகள் தொடர்பாக புத்தளம் மாநகர சபை உறுப்பினர் சஹ்ரான் தாஜுதீன் தெளிவு படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
இந்த பதிவு நடவடிக்கைகள் தில்லையடி கிராம சேவையாளர் காரியாலயம், தில்லையடி மொஹிதீன் ஜும்ஆ மஸ்ஜித், முருகன் கோயில், அல்ஜித்தா மஸ்ஜித், உமராபாத் மஸ்ஜித் ஆகியவற்றில் இடம்பெறுகின்றன.
மேற்குறிப்பிட்டவற்றின் ஏதாவது ஓர் இடத்தில் தகவல்களை பதிவுசெய்து கொள்ளலாம்.
பதிவுசெய்யும் போது ஓர் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பின் இழப்பீட்டிற்காக அவ்வீட்டின் ஓர் குடும்பம் மாத்திரம்தான் பதிவுசெய்யப்படும்.
குடும்ப தலைவரின் தேசிய அடையாள அட்டை மற்றும் செயற்படும் தொலைபேசி இலக்கத்தையும் பதிவின் போது வழங்கப்படவேண்டும்.

No comments