புதிய காதி நீதிபதிக்கு கௌரவிப்பு நிகழ்வு.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மற்றும் சிலாபம் பிரதேசத்திற்கான புதிய காதி நீதிபதியாக அண்மையில் பதவியேற்ற புதிய காதி நீதிபதி அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி), அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் அழைப்பை ஏற்று அதன் காரியாலயத்திற்கு அண்மையில் (14) வருகை தந்தார்.
இதன்போது புதிய காதி நீதிபதி அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி) நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் உப தலைவர் அஷ்ஷெய்க் சௌகி பஹ்ஜி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
காதி நீதிபதியின் முன்னெடுப்புக்கள் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் என இதன் போது பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன.



No comments