Breaking News

புத்தளம் - நல்லாந்தழுவை மன்சூர் அகடமியினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!.

புத்தளம் - மதுரங்குளி நல்லாந்தழுவையில் இயங்கிவரும் மன்சூர் அகடமியினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மன்சூர் அகடமி அனைத்து மாணவர்களுக்கும் உலர் உணவு பொதிகள் நேற்று (12) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


மன்சூர் அகடமியின் ஸ்தாபகத் தலைவர் பீர் முஹம்மது மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஆப்தீன் எஹியா மற்றும் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் முன்னாள் அதிபர் ஓய்வு பெற்ற என். எம். எம். நஜீப், ஆசிரியர் ஏ. ஏ. அஷ்ரப், முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் முன்னாள் செயலாளர் ஏ. எஸ். ஜலீல் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இதேவேளை ஐந்து இலட்சம் பெறுமதியான உலர் உணவு பொதிகள் சுமார் 130 மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











No comments