Breaking News

அரசியல் கருத்துக்களுக்கும், அரசியல்வாதிகளை புகழ்வதற்குமிடையில் உள்ள புரிதல்கள்.

ஏதோ காரணத்திற்காக தனக்கு விருப்பமான அரசியல்வாதியை “”வீராதி வீரர், அஞ்சா நெஞ்சன், எதற்கும் அஞ்சாத சிங்கம், புலி என்றும், அல்லது மானே, தேனே, தென்மானே”” போன்ற இல்லாத பொல்லாத வரிகள் மூலமாக ஒவ்வொரு கட்சி ஆதரவாளர்களும் புகழ்ந்து பதிவிடுகின்றனர். 


இதுதான் “”புகழ்தல்”” என்ற வார்த்தைக்கு பொருந்தும். 


ஆனால் அரசியல் வரலாற்றுக் கருத்துக்களை பதிவிடுகின்றபோது, அவ்வாறு பதிவிடும் கருத்துக்கள் தனது எதிரிக்கு சாதகமாக இருக்கின்றது என்பதற்காக, குறித்த அரசியல்வாதியை புகழ்கின்றார் என்று குறிப்பிடுவது தவறானது. 


உதாரணமாக நிந்தவூர் கலாச்சார மண்டபத்துக்கு ரவூப் ஹக்கீம் நிதி ஒதுக்கியது பற்றி பதிவிட்டிருந்தேன். அது அமைச்சு மூலமாக நடைபெற்ற உண்மைச் சம்பவம். அதற்கான ஆதாரங்களும் உள்ளது. ஆனால் அவ்வாறு உண்மையை குறிப்பிடுகின்றபோது, அது ரவூப் ஹக்கீமின் எதிரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. 


அதாவது ரவூப் ஹக்கீமை புகழ்கின்றார் என்று கூறுகின்றனர். நடந்த உண்மை சம்பவத்தை குறிப்பிடாமல் பொய்யை குறிப்பிடும்படி எதிர்பார்கின்றார்களா என்று கேட்கத் தோன்றுகிறது.  


தனக்கு விருப்பமில்லாத ஒருவராக இருந்தாலும், நடந்த உண்மைகளை கூறுவதற்கு தயங்கக்கூடாது. அவ்வாறு கூறுவதனை புகழ்தல் என்ற வார்த்தை பிரயோகம் தவறானது. 


அதேநேரம் அவர்கள் அரசியலில் விடுகின்ற தவறுகளை சுட்டிக்காட்டினால் அவர்களுக்கு எதிரானவர்கள் என்று கருதவும் கூடாது.   


எனவேதான் அரசியல்வாதிகளை போலியாக புகழ்வதற்கும், நடைபெற்ற உண்மையான வரலாற்றுச் சம்பவங்களை பதிவிடுவதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளது. இதில் யதார்த்தத்தை விளங்கிக்கொள்வதில்தான் அனைத்தும் தங்கியுள்ளது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments