Breaking News

கற்பிட்டி பிராந்திய பள்ளிவாசல்களுக்கான புதிய தொழுகை நேர அட்டவணை விநியோகம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கற்பிட்டி பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் அதன் தலைவர்  அஷ்ஷெய்க் எம் ஏ பீ எம் முபாஸில் (உஸ்மானி ) தலைமையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமையகம் வெளியிட்டுள்ள தொழுகை நேர புதிய அட்டவணை தொடர்பான விழிப்புணர்வும் விநியோகமும் இடம்பெற்றது.


மேற்படி நிகழ்வில் கற்பிட்டி முதல் நரக்களி வரையான சகல பள்ளிவாசல்களின் தலைவர் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்று குழு உறுப்பினரும், பிறை குழு செயலாளரும், ஃபத்வா குழு உறுப்பினருமான அஷ்ஷெய்க் ஏ.எம்.எம். மஃபாஹிம் (அஹ்ஸனி) கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் 


கற்பிட்டி பிராந்தியம் இரண்டாக பிரிக்கப்பட்டு  நுரைச்சோலை ஜாமிஉல் ஹஸனாத் ஜும்ஆ மஸ்ஜிதிலும் கற்பிட்டி பஸார் ஜும்ஆ மஸ்ஜிதிலும் என இரண்டு நிகழ்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.














No comments