அக்கரைப்பற்று – புத்தளம் மேயர்களின் நட்புணர்வு சந்திப்பு
அக்கரைப்பற்று நகரசபையில் நேற்று நடைபெற்ற ஒரு நட்புணர்வு சந்திப்பில் அக்கரைப்பற்று மாநகரசபை மேயர் ஏ.எல்.எம். அதாவுல்லாவும், புத்தளம் மாநகரசபையின் “நள்ளிரவு மேயர்” என்று பொதுமக்களால் அழைக்கப்படும் உறுப்பினர் இஷாம் மரிக்காரும் கலந்து கொண்டு தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக விரிவான உரையாடலை மேற்கொண்டனர்.
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஆரோக்கியமான அரசியலை உருவாக்குவது எப்படி என்பதையும், எதிர்காலத்தில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இணைந்த பணிகள் எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பதையும் இருவரும் கலந்துரையாடினர்.
இருவருக்கும் இடையிலான உரையாடலில் மறைந்த அரசியல் தலைவர் கே.ஏ. பாயிஸ் பற்றியும் விசேஷமாக பேசப்பட்டது. அவர் இருவருக்கும் நெருங்கிய நண்பராக இருந்ததையும், சமூக நலனுக்காக அவர் செய்த பணிகளை இருவரும் நினைவுகூர்ந்தனர்.
இந்த சந்திப்பின் இறுதியில், எந்த கூடுதல் அதிகாரங்களும் இல்லாமல் பொதுமக்களின் அன்பால் “நள்ளிரவு மேயர்” என்று அழைக்கப்படும் புத்தளம் நகரசபை உறுப்பினர் இஷாம் மரிக்கார், கே.ஏ. பாயிஸ் அவர்களின் வரலாறு புத்தகத்தின் ஒரு பிரதியை மேயர் அதாவுல்லாவிற்கு அன்புடன் கையளித்தார்.
இந்த நட்புணர்வு சந்திப்பு, இரு நகரங்களின் அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் ஓர் எடுத்துக்காட்டாகவும், எதிர்காலத்தில் ஆரோக்கியமான அரசியலுக்கான நல்ல முன்னோட்டமாகவும் அமைந்துள்ளது.


No comments