Breaking News

திண்ணை, ஒரு முற்றத்து சம்பாஷனை.

எம்.யூ.எம்.சனூன்

கலை இலக்கியத்தினூடாக சமூக மாற்றத்தை இலக்காக கொண்டு நகரும் புத்தளம் CREATE இலக்கிய வட்டத்தின் புதியதோர் நிகழ்சித் தொடராக, "திண்ணை" ஒரு முற்றத்து சம்பாஷனை என்னும் மகுடத்தின் கீழான சுவாரஸ்யமான கலந்துரையாடல் அமர்வு ஞாயிற்றுக்கிழமை (23) ஆரம்பித்து வைக்கப்பட்டது.


புத்தளம் கடல் நடுவில், கொழும்பு முகத்திடலில் அமைந்துள்ள Blue Ripple விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  மேற்படி நிகழ்ச்சியின் முதல் அமர்வில் "100 வருடங்களின் முன் புத்தளம்" என்ற கருப்பொருள், கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது.


CREATE மற்றும் 'திண்ணை' நிகழ்ச்சி அறிமுகத்தை அதன் தலைவர் கவிஞர் புத்தளம் மரிக்கார் வழங்க, நிகழ்ச்சி ஒழுங்கு விதிகளை செயலாளர் அஜ்மல் ரஜாப்தீன் அவர்கள் குறிப்பிட்டு கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்தார்.


"திண்ணை" என்ற பழங்கால வாழ்க்கை வடிவத்தை பிரதிபலிக்கும் வகையில் குடில், ஓலைப் பாய், மண் பாத்திரங்கள், தேநீரும், சர்க்கரையும், நிலக்கடலை, ஓலை தட்டுப் பெட்டி என ஒரு நிகழ்ச்சி சூழல் முயற்சிக்கப்பட்டிருந்தது.


புத்தளம் முன்னாள் உதவிக்கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர், கவிஞர் கலாபூஷணம் ஜவாத் மரிக்கார், ஓய்வு நிலை அதிபர் திரு. நாகராஜா, கவிஞர் சுகைப் ஆசிரியர் உள்ளிட்ட மற்றும் பலர் பங்கேற்ற மேற்படி நிகழ்வு சுவை சொட்டும் நினைவுகள் சுமந்து நிர்வாகக் குழு உறுப்பினர் சகோதரி அக்ஸா ஐயூப்கானின் நன்றியுரையுடன் நிறைவுக்கு வந்தது.














No comments