கற்பிட்டி செடோ நிறுவனத்தில் இடம்பெற்ற கழிவு முகாமைத்துவ திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி குறிஞ்சிபிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவின் அஷ்ரப் நகர் கிராமத்தில் நீண்ட நாட்களாக காணப்படும் தினசரி வீட்டுக் கழிவுகள் அகற்றல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளும் முகமாக கற்பிட்டி செடோ நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட கழிவு முகாமைத்துவ செயற்திட்டம் கிரிஸலிஸ் நிறுவனத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்துடன் அதன் முதற்கட்ட ஆய்வு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை (19) செடோ நிறுவனத்தில் அதன் பணிப்பாளர் ஏ.ஆர் முனாஸ் தலைமையில் இடம்பெற்றது
இதில் கிரிஸலிஸ் நிறுவனத்தின் செயற்திட்ட இணைப்பாளர் அஜித், ஜெராட் தலைமையிலான ஆய்வாளர்கள் மற்றும் செடோ நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஆலோசகர்கள், கற்பிட்டி பிராந்திய சுற்றாடல் குழு உறுப்பினர்களான ஏ.எச்.எம் எம் ஷாபி, எச் எம் சுகைப் மற்றும் அஷ்ரப் நகர் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி திட்டத்தின் ஊடாக குறிஞ்சிபிட்டி தெற்கு அஷ்ரப் நகரில் தினசரி சேகரிக்கப்படும் வீட்டு கழிவுகள் பள்ளிவாசல் நிர்வாகத்நினரால் வழங்கப்பட்டுள்ள காணிக்கு கொண்டு வரப்பட்டு அது வேறு படுத்தப்பட்டு சோதனைப் பசளை உற்பத்தி செய்தல் அந்த பசளை உற்பத்தி மூலம் வீட்டுத்தோட்டம் உருவாக்குதல் போன்ற செயற்பாடுகள் தொடர்பான முதற்கட்ட ஆய்வுகள் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டமை முக்கிய அம்சங்களாக காணப்பட்டது.



No comments