புத்தளம் ரபீக் மாஸ்டர் கலை இலக்கிய விழாவில் மூன்று விருதுகளை அள்ளிக்குவித்து சாதனை.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகரின் ஓய்வு பெற்ற ஆசிரியர், கலா பூஷணம், கலைஞர், கவிஞர், நாடறிந்த ஓவியர், "அன்னூர் மாமா" வானொலி புகழ் எஸ்.எஸ்.எம். ரபீக், வடமேல் மாகாண கலை இலக்கிய விழாவில் மூன்று விருதுகளை வென்று சாதித்துள்ளார்.
மேற்படி கலை இலக்கிய போட்டியில், ஒரு முதலாம் இடத்தையும், இரு இரண்டாம் இடங்களையும் பெற்று இவர் சாதித்து காட்டி இருக்கின்றார்.
"நியாயங்கள் வாழட்டும்" எனும் தலைப்பிலான சிறுவர் கதை போட்டியில் முதலாம் இடத்தையும், "மீண்டும் வேண்டும்" என்ற தலைப்பிலான சிறுகதை போட்டியில் இரண்டாம் இடத்தையும், "கவிதைக் கோலங்கள்" எனும் தலைப்பினான கவிதை போட்டியில் இரண்டாம் இடத்தையும் இவர் பெற்றுள்ளார்.
புத்தளம் நகர மக்களால் அன்போடு மதிக்கப்படும், தனது இயலாத வயதிலும் கூட கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் ரபீக் மாஸ்டர் இதற்கு முன்பும் கலைத்துறையில் பல்வேறு விருதுகளை வென்று குவித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.





No comments