ICST பல்கலைக்கழகமும் அபுதாபி பல்கலைக்கழகமும் (Abu Dhabi University) இணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல்..!
(எஸ். சினீஸ் கான்)
ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான அபுதாபி பல்கலைக்கழகம் மற்றும் ICST பல்கலைக்கழகம் இணைந்து செயற்படுவது தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் இன்று (23) அபுதாபியில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம், பொறியியல் (Engineering), Quantity Surveying, முகாமைத்துவம் (Management) போன்ற துறைகளில் இரண்டு பல்கலைக்கழகங்களும் இணைந்து செயல்படுவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மேலும், முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான புலமைப்பரிசில்கள், விரிவுரையாளர்களுக்கான விசேட பயிற்சி திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளில் எதிர்கால ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் ICST பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகத் தவிசாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கலாநிதி அன்சாரி, கலாநிதி பஷீல் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அபுதாபி பல்கலைக்கழகத்தின் சார்பில் பல்கலைக்கழக வேந்தர் Professor Ghassan Aouad மற்றும் பல முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.






No comments