Breaking News

புத்தளம் முள்ளிபுரம் பிரதேசத்தின் அபிவிருத்திகள் ஆரம்பம்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் பிரதேச சபைக்குட்பட்ட புத்தளம் முள்ளிபுரம் பிரதேத்தில் அமைந்துள்ள வீதியை கொங்கிரீட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்காக, அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.


ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், புத்தளம் மாநகர சபை உறுப்பினருமான ரனீஸ் பதூர்தீனின் மேற்பார்வையின் கீழ், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.நில்பானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் பத்து லட்சம் ரூபா செலவில் குறித்த பாதை கொங்கிரீட் பாதையாக புணரமைப்பு செய்யப்பட உள்ளது. 


ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினராக ஏ.ஆர்.எம். நில்பான் பதவியேற்ற பின் அவரது முதல் கன்னி அபிவிருத்தி திட்டமாக இந்த கொங்கிரீட் பாதை அபிவிருத்தி பணி ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.


எதிர்காலத்தில் இது போன்று பல பாதைகள், வடிகான்கள் உட்பட இன்னும் பல சேவைகளோடு முள்ளிபுரம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.நில்பான் தெரிவித்தார்.






No comments