தரம் ஐந்து மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மணல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மற்றும் பெறத் தவறிய தரம் 05 மாணவச் செல்வங்களுக்கான பாராட்டு விழாஅண்மையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறைறது.
மணல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பா.ஜெனட்ராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வினை சிறப்பிக்க மணல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும், தற்போதைய நாவற்காடு றோமன் கத்தோலிக்க வித்தியாலய அதிபருமான நிக்சன் நோயல், முந்தல் தமிழ் வித்தியாலய அதிபர் ஜெயகாந்த், பணி நிறைவு ஆரம்பக்கல்வி இணைப்பாளர் வி. அருணாகரன் மற்றும்
தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் அதவியா ஆகியோர் அதிதிகளாக பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. பெற்றோர்களும் தம் செல்வங்களுக்கான பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வானது மணல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் உப அதிபர் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.








No comments