எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட புழுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் பாடசாலை வளாகத்தில் (01) இடம்பெற்றன.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ. எல். எம். றிபாய்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்வருடத்திற்கான சிறுவர் தினமானது "உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்" எனும் தொணிப் பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





