ஒய்வு பெற்றது ஓர் ஆளுமை.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் 33 ஆண்டுகள் சேவையாற்றி ஓய்வு பெறும் விஞ்ஞான மற்றும் கணித பாட ஆசிரியை பி.எம்.எப். ரிஸ்வியா அவர்களுக்கு பாடசாலை நிர்வாகத்தினால் அண்மையில் (27) பிரியாவிடை விழா நடாத்தப்பட்டது.
அதிபர் ஐ.ஏ.நஜீம் தலைமையில் இந் நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவும், மனமார்ந்த முறையிலும் நடைபெற்றது.
கல்லூரி நிர்வாகமும், ஆசிரியர் குழாமும் மற்றும் மாணவர்களும் அவரை மங்கா மதிப்பளித்து பாராட்டி கௌரவித்தனர்.
அதிபர் தலைமையில் ஆசிரியைக்கான அன்பளிப்புக்களை ஆசிரியர்கள் மனமுவந்து ஒன்றிணைந்து வழங்கிவைத்தனர்.
கல்லூரியில், ஆசிரியை அளித்த மதிப்புமிக்க சேவையை கல்லூரி என்றும் நினைவில் வைத்திருக்கும் என அதிபர் தனதுரையில் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற ரிஸ்வியா ஆசிரியை நீண்ட காலம் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்காக மாணவர்களை தயார் படுத்தி வந்த ஒருவர். இவரது கணவர் ஏ.ஓ.ஜே.முசாதிக் ஓய்வு பெற்ற விஞ்ஞானப் பாட ஆசிரியர் ஆவார்.
இது தவிர இவரது மூத்த புதல்வி கொழும்பு பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. மற்றும் எம்.எஸ்.சி. நிறைவு செய்து விட்டு தற்போது புத்தளம் மணல்தீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் ஆசிரியையாக கடமையாற்றுகின்றார்.
இவரது இளைய மகன் டாக்டர் முன்ஷிப் புத்தளம் தள வைத்தியசாலையில் தற்போது வைத்தியராக கடமை ஆற்றி வருகின்றார். 2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையிலே இவர் அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தைப்பெற்று முழு நாட்டினதும் பாராட்டைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




No comments