கனடாவில் நிதி தொழில்நுட்பவியல் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார் ஆத்திப்.!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
கல்முனை சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவரும் ஐக்கிய இராச்சிய சோலன் பல்கலைக்கழக கணக்கியல் நிதி பீ.எஸ்.ஸி பட்டதாரியுமான சாய்ந்தமருது ஏ.ஏ.எம். ஆத்திப் கனடாவிலுள்ள செனகா உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிதி தொழில்நுட்பவியல் பட்ட மேற்படிப்பை மேற்கொண்டு Honours சிறப்புப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இதற்கான பட்டமளிப்பு விழா இம்மாத இறுதியில் கனடா டொரண்டோவில் நடைபெறவுள்ளது.
இவர் முன்பு கனடாவின் கனடோர் கல்லூரியில் வியாபார முகாமைத்துவத்தில் பட்டப்பின் சான்றிதழைப் பெற்றிருக்கிறார்.
இவர் சாய்ந்தமருதைச் சேர்ந்த மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) தம்பதியினரின் கனிஷ்ட புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments