72வது மீலாதுன் நபி போட்டியில் (2025) பங்கேற்பதற்கான அழைப்பு.
எம்.யூ.எம்.சனூன்
கொழும்பு சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் (MICH) ஏற்பாடு செய்துள்ள 72 வது மீலாதுன் நபி போட்டியில் (2025) பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த வருடாந்த நிகழ்வு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை நினைவு கூறும் வகையில் நடத்தப்படுகிறது.
இந்த போட்டிகளானது தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஹிப்ல், அரபு எழுத்தணி, மல்டிமீடியா விளக்கக்காட்சிகள் மற்றும் பேச்சு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளை உள்ளடக்கியதாக அமையும்.
இலங்கை முழுவதிலிருந்தும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் மாதம் 7 ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
விண்ணப்பங்களை பதிவு தபால் மூலம் தலைவர்,
தஃவா மற்றும் மதக் குழு,
சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம், 5வது மாடி, இல : 27, சேர் ராசிக் பரீத் மாவத்தை,
கொழும்பு 01 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
ஏனைய விபரங்களுக்கு 0773578986 எனும் தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளலாம்.
No comments