Breaking News

காத்தான்குடி நகர சபையின் முன்மாதிரியான செயற்பாடு; கணக்கறிக்கை மற்றும் கூட்டறிக்கை மக்கள் பார்வைக்கு..!

(எஸ். சினீஸ் கான்)

காத்தான்குடி நகர சபை, மக்களுக்கு நேரடி பொறுப்புணர்வுடன் தனது மாதாந்த கூட்ட அறிக்கையும், கணக்கறிக்கையையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படுத்தியுள்ளது என்பது பாராட்டத்தக்க விடயமாகும்.


இவ்வாறு வெளிப்படுத்துவது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும். என்பதோடு மற்றும் பங்களிப்பை ஊக்குவிக்கக்கூடியது. மக்கள் நலனில் ஈடுபாடு கொண்ட ஒரு நிர்வாகத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது.


இதனை ஏனைய உள்ளூராட்சி மன்றங்களும் பின்பற்ற வேண்டும். மக்கள் நலனுக்காக செயல்படும் ஒவ்வொரு நிர்வாகமும் இதுபோன்று வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது மிக அவசியமாகும்.


மக்கள் நம்பிக்கையை பெற விரும்பும் உள்ளூராட்சி நிர்வாகங்கள், காத்தான்குடி நகர சபையின் இந்த செயலை முன்மாதிரியாக ஏற்று, இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.


https://kuc.smartcitykattankudy.com/last-meeting




No comments