பா ஓதல் போட்டியில் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி முபீன் சபியா தேசிய மட்டத்துக்கு தெரிவு.
எம்.யூ.எம்.சனூன்
மாகாண மட்ட தமிழ் மொழித் தினப்போட்டிகளின் பிரிவு 02 "பாவோதல்" போட்டியில் புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த முபீன் சபியா என்ற மாணவி தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் அத்தாரிக் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற இந்த போட்டிகளில் கலந்து கொண்ட போதே முபீன் சபியா வெற்றி பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகி இருக்கின்றார்.
பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னியின் வழிகாட்டலில், ஆசிரியர்களின் சிறந்த பயிற்றுவித்தலின் பிரகாரம் இந்த வெற்றி கிடைக்கப்பெற்றிருக்கின்றது.
இதே வேளை இம்மாணவியின் மூத்த சகோதரி முபீன் முபா 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழ் தின போட்டியின் பாவோதல் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments