புத்தளம் எஸ்ரா கல்வி நிலையத்தின் வருடாந்த கலை விழாவும், பரிசளிப்பும்.
எம்.யூ.எம்.சனூன்
"பிள்ளைகளை கல்வியிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்த சிந்தனைகொண்ட பிரஜைகளாக உருவாக்குவதில் முன்பள்ளி பாடசாலைகள், பிரத்தியேக கல்வி நிறுவனங்கள், சமய பாடசாலை களின் பங்களிப்பு இன்றியமையாதது" என புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் எம்.எப்.ரின்சாத் அஹ்மத் தெரிவித்தார்.
புத்தளம் இபுனு பதூதா வீதியில் கடந்த 12 வருடங்களாக இயங்கி வருகின்ற எஸ்ரா கல்வி நிலையத்தின் வருடாந்த கலை விழா மற்றும் பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வானது புத்தளம் கலாச்சார மண்டபத்தில் அதன் தலைமை ஆசிரியை யஸ்மின் ரமீஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர் மாணவியர் பரிசுகளை பெற்றுக்கொண்டதோடு தமது கலை ஆற்றல்களையும் மேடையேற்றினர்.
புத்தளம் மாநகர சபையின் மேயர் ரின்சாத் அஹ்மத் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் கல்வி அபிவிருத்தியில் அரசாங்கம் தற்போது பாரியளவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு வலுவூட்டும் வகையிலே இந்த கல்வி நிலையத்தின் பொறுப்பாசிரியையின் கற்பித்தல் மற்றும் தலைமைத்துவ ஆற்றலையும் மாணவர்களின் பெற்றோரின் ஒத்துழைப்பையும் இன்றைய நிகழ்ச்சியில் காணக்கூடியதாக இருந்தது.
அந்த வகையில் இந்த கல்வி நிலையம் நிறைவேற்றும் இச்சமூகப் பொறுப்பை புத்தளம் மாநகர சபையின் முதல்வர் என்ற வகையில் பாராட்டி வாழ்த்துகின்றேன் என தெரிவித்தார்.
இந்த நிகழ்விலே புத்தளம் மாநகர சபையின் பிரதி மேயர் நுஸ்கி நிசார், புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாக சபை தலைவர் ஏ.டி.எம். நிஜாம், குருநாகல் மாவட்ட செய்தியாளரும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் குழும பணிப்பாளருமான முஹம்மது பஸ்லான், புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி அலுவலர் எம்.ஜீ.எம்.ஜனூன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments