கணித சிதம்பரா போட்டியில் ஆலங்குடா பாடசாலை மாணவன் சகீன் சிமாக் தங்கம் வென்று சாதனை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி ஆலங்குடா முஸ்லிம் மகா வித்யாலயத்தில் தரம் 09 ல் கல்வி பயிலும் மாணவன் சகீன் சிமாக் யாழ்ப்பாணம் வெல்வட்டித்துறையில் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற கணித சிதம்பரா போட்டியின் விருது வழங்கும் விழாவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இம் மாணவனின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்து செயற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கு பாடசாலை நிர்வாகம் சார்பாக தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அதிபர் எம் ஸகூர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments