சிலாபம் - வரலாற்று சிறப்பு வாய்ந்த முன்னேஸ்வர ஆலயத்தில் கொடியேற்றம்
(உடப்பு செய்தியாளர்-க.மகாதேவன்)
வரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகாசமேத ஶ்ரீ முன்னைநாதர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் கொடியேற்ற நிகழ்வு (11) திங்கட்கிழமை இடம்பெற்றது.
பிரதான குருவும் தர்மகர்த்தாவுமாகிய ஆலயக் குருக்கள் பிரம்மஶ்ரீ ச.பத்மநாபக்குருக்கள் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கொடிக்கம்பத்துக்குரிய சீலை யானையில் சுமக்கப்பட்டு உள்வீதி, வெளிவீதி வந்து பின்னர் கொடியேற்றம் இடம்பெற்றது.
நாட்டின் பல பகுதியிலிருந்தும் இனமதம் பாராது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.














No comments