Breaking News

யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதியில் 23 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவை கைப்பற்றிய கடறபடை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

யாழ்ப்பாணம் கட்டைக்காடு அலியாவேலி கலப்பு அருகே இலங்கை கடற்படை நடாத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 102 கிலோ 350 கிராம் கேரளா கஞ்சா ரூபா 23 மில்லியனுக்கும் அதிக பெறுமதி உடைய தொகை திங்கட்கிழமை (04): கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


அதன்படி யாழ்ப்பாணம் கட்டைக்காடு அலியாவேலி கலப்பு அருகே உள்ள பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிலையம் நடாத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது அப்பகுதியில் உள்ள புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகத்திற்கிடமான பொதிகள் அவதானிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட போதே மேற்படி கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது


கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.




No comments