Breaking News

புத்தளம் தாராக்குடிவில்லு ஊரைச் சேர்ந்த மாணவன் முஹம்மது ரஸ்லான் (வயது 14) காணவில்லை

குளியாப்பிட்டி டவுன் மத்ரஸாவைச்  சேர்ந்த மாணவன் முஹம்மது ரஸ்லான் (வயது 14) காணவில்லை – விபரம் தெரிந்தவர்கள் அறியத்தருமாறு பெற்றோர் வேண்டுகோள்.


புத்தளம் தாராக்குடிவில்லு ஊரைச் சேர்ந்த குளியாப்பிட்டி டவுன் மத்ரஸாவில் கல்வி கற்பவருமான முஹம்மது ரஸ்லான்  (வயது 14) இவர் மத்ரஸாவில் இருந்து வெளியில் போன நேரம் காணாமல் போய் உள்ளார்.


இன்றுடன் இவர் காணாமல் போய் இரண்டு நாட்கள் கடந்து விட்டன இதுவரை இவர் எங்கு இருக்கிறார் எங்கு சென்றார் என்பது தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.


உற்றார் உறவினர்கள் கடந்த இரண்டு நாட்களாக பலத்த தேடுதல்களை மேற்கொண்ட போதும் இதுவரை வெற்றி அளிக்கவில்லை.


காணாமல் போன  முஹம்மது ரஸ்லான் அவரை கண்டுபிடிப்பதற்கு குடும்பத்தினர் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரியுள்ளனர். 


மாணவன் தொடர்பில் மேலதிக தகவல்களை கிடைக்கும் பட்சத்தில் கீழ் உள்ள  உறவினர்களின் தொடர்பு இலக்கத்திற்கு அறியத் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.


காணாமல் போன மாணவன் மீண்டு வர உங்கள் மேலான பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.


தொடர்பு கொள்ள அழையுங்கள்

0703744209

0716443727

0717182975


ஹபீல் நிஜாமுதீன் (கபூரி)





No comments