உடப்பு - ஆண்டிமுனையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாரான மாணவர்களை பெற்றோர்கள் ஆர்வத்துடன் வழியனுப்பும் நிகழ்வு
(உடப்பு செய்தியாளர் க.மகாதேவன்)
ஐந்தாந்தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (10) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் மாணவர்கள், ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெறும் பரீட்சைக்கு தயாரான நிலையில் சென்றனர்.
இதில் உடப்பு தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள், ஶ்ரீ கிருஷ்ணா ஆரம்பப்பாடசாலை மாணவர்கள், ஒற்றைப்பனை றோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் இதன் போது பரீட்சைக்காக சென்றனர்.
இதன்போது பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஆர்வத்துடன் வழியனுப்பி வைத்தமை குறிப்பிடத்தககது.
No comments